Tuesday, April 28, 2009

எது உண்மை எது பொய்?

இலங்கை போர் நிறுத்தம் பற்றி பல்வேறு செய்திகள் வருகின்றன. மத்திய அரசு, இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்ததாக சொல்கிறது.மாலையில் இலங்கை அரசும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ராஜபக்சே-வும், இலங்கை ராணுவ அதிகாரியிம் , -இந்திய தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்து இருக்கிறார்கள்.எது உண்மை, எது பொய்?சில நியாமான கேள்விகள் மனிதில் எழதான் செய்கிறது.1. இவ்வளவு நாள் இந்திய அரசு, மற்ற நாட்டு உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்ற சொன்ன இந்திய அரசு, இன்று எப்படி தலையிட்டு( தலையிட்டதா?) இலன்கை உடனே போர் நிறுத்தம் செய்கிறது என்று அறிவித்து இருக்கிறது....?2.கருணானிதி அவர்களுக்கு இவ்வளவு நாள் உண்ணாவிரதம் இல்லாமல், ஆயிரக்கணக்கான மக்கள் இரந்தப் பிறகு, கடை காட்சியாக உண்ணாவிரதம் இருந்து, இந்திய அரசை செவி சாய்க்க வைத்தாரே, இதை ஏன் முதலிலே செய்யவில்லை3.உலக நாடுகள், ஐ.நா., G8 நாடுகள், மற்றும் சர்வதேச அமைப்புகள், போர் நிறத்தம் செய்ய வலியுறுத்தின போது, இலங்கை ஏன் செவி சாய்க்க வில்லைநன்றி : தட்ஸ்தமிழ்.காம் http://thatstamil.oneindia.in/news/2009/04/27/tn-sri-lanka-issue-and-karundnidhis-fast.htmlஇலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறியது, ஐ.நா. கூறியது, ஐரோப்பிய நாடுகள் கூறின, உலகெங்கும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்கள் நடத்தினர். ஆனால் இத்தனை பேர் கூறியும் கேட்காத இலங்கை அரசு, இன்று முதல்வர் கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு கூறியதைக் கேட்டு டக்கென்று தாக்குதலை நிறுத்துவதாக கூறியுள்ளது.அதிகாலையில் உண்ணாவிரதம், பிற்பகலில் போர் நிறுத்தம் என்று மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்திருக்கின்றன. இது மக்கள் மனதில் பல ஆச்சரியக் கேள்விகளை எழுப்பி விட்டுள்ளது.இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் இதுவரை சுமார் 13 பேர் தீக்குளித்து தியாகம் செய்துள்ளனர்.இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதவதையும், உணவு, உடை இன்றி பாதிக்கப்படுவதை ஐநா சபை உறுதிப்படுத்தியதோடு, உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.இதே கோரிக்கையை அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், அதில் அங்கம் வகிக்கும் திமுக அரசும் தான் காரணம் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.இலங்கையில் உள்ள தமிழர்களை காப்பாற்றக் கோரி உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கி எழுந்து உலக மக்களை கவனத்தை கவரும் விதத்தில் பல வித போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இப்படி பல்வேறு தளங்களில், பல்வேறு முறைகளி்ல் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஏகப்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலிகள், பொது வேலைநிறுத்தங்கள், தீக்குளிப்புகள்.உலக நாடுகள் அனைத்தும் யார் இந்த தமிழர்கள் என்று கேட்கும் அளவுக்கு போராட்டங்களின் சத்தம் உலகை உலுக்கி விட்டது.ஆனால் அப்போதெல்லாம் திமுக உணர்ச்சிவசப்படவில்லை. காங்கிரஸோ கண்டு கொள்ளவே இல்லை.ஆனால் இன்று திடீரென அதிகாலையில் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார் முதல்வர் கருணாநிதி. அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் அலறி அடித்து இலங்கையைத் தொடர்பு கொள்கிறது மத்திய அரசு. அடுத்த சில நிமிடங்களில் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடுகிறது இலங்கை அரசு.அதாவது கிட்டத்தட்ட 7 மணி நேரங்களில் எல்லாமே முடிந்து விட்டது. அதாவது போரை நிறுத்தியாகி விட்டது.ஆனால் இதை ஏன் முன்பே செய்யவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் அலை மோதுகிறது.இந்தியாவால் போரை நிறுத்த முடியும் என்பது கருணாநிதி உண்ணாவிரதத்தின் மூலம் தெளிவாகி விட்டது.இந்திய அரசை வலியுறுத்தி போர் நிறுத்தம் செய்ய வைக்கும் அளவுக்கு திமுகவுக்கு பலம் உள்ளது என்பதை கருணாநிதியின் உண்ணாவிரதம் தெளிவாக்கியுள்ளது.கருணாநிதி நினைத்தால், மத்திய அரசு நினைத்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க முடியும் என்பதை இந்த உண்ணாவிரதம் நிரூபித்துள்ளது.ஆனால் இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை.இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.அதற்கு முக்கிய காரணம் இரண்டு. ஒன்று, இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகம் முழுவதும் முக்கிய தேர்தல் பிரச்சினையாக மாறி விட்டது.2வது தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், நிச்சயம் அமைத்துத் தரும் என்ற ஜெயலலிதாவின் திடீர் பல்டி அறிவிப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் அவர் மீதான பார்வையை மாற்றிப் போட்டு விட்டது.இதை விட முக்கியமாக, இலங்கை விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் மதிமுக பொதுச் செயாளர் வைகோவும், இடதுசாரிகளும் காட்டி வரும் ஆர்வத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதாக உளவுப் பிரிவு முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளதாம்.இந்த நிலையில் ஜெயலலிதா தனி ஈழத்தை ஆதரித்து விட்டார். அப்படியானால் கருணாநிதி என்ன சொல்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இதனால் இலங்கை விவகாரத்தில் திமுக தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்பதை அனைவருக்கும் பளீர் என பொட்டில் அறைந்தது போல விளக்கும் முகமாகவே, கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டதாக கருதப்படுகிறது.இந்த உண்ணாவிரதம் மூலம் அதிமுக கூட்டணியின் வேகத்தை கட்டுப்படுத்தவும், தேர்தலில் திமுக- காங். கூட்டணிக்கு ஒரேயடியாக மக்கள் ஆப்பு வைக்காமல் தடுக்கலாம் என்ற எண்ணமும் அடங்கியிருப்பதாகவும் கருதப்படுகிறது.இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால், கருணாநிதி உண்ணாவிரதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்த ஒரு டிவியின் வர்னணையாளர் இன்னும் சில மணி நேரங்களில் இலங்கையில் இயல்பு நிலை திரும்பி விடும என்று கூறியதுதான்.எது எப்படியோ உண்ணாவிரதம் முடிந்து விட்டது. இலங்கையில் போர் இனி நடக்காது என்று ப.சிதம்பரமும் நம்பிக்கை தெரிவித்து விட்டார். நாளை காலையில் நியூஸ் பேப்பரைப் படிக்கும்போதும், டிவி செய்திகளைப் பார்க்கும்போதும்,, ராணுவத் தாக்குதலில் இத்தனை பேர் பலி என்ற செய்தி வராது என்று நம்புவோம்.

(அ)சாதனைகள் -தலைகுனிவு

கடந்த ஐந்து வருடங்களாக காங்கரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் கீழ்க் கண்டவற்றை முன்னேற்றமும், வளர்ச்சியும் அடைய செய்யவில்லை. கண்ணில் தெரிவது எல்லாம் இவர்களின் சாதனை அணுச்சக்தி ஒப்பந்தம் மட்டுமே. இதுவும் சாதனை என்று சொல்ல முடியாது. இந்தியாவை மற்ற நாட்டினரிடம் சார்ந்து இருக்கவே வழி வகை செய்கிறது.இதுவெல்லாம் இந்த அரசின் (அ)சாதனைகள்.1. ஏழ்மை -வறுமை நிலை - 80 விழுக்காடு.2. மோசமான / போடபடாத சாக்கடைகள்,3. மோசமான / போடபடாத கட்டமைப்பு வசதிகள்,4.வேலையில்லாதவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு5.விலைவாசி உயர்வு6.மோசமான நிர்வாகம், மோசமான அரசு அதிகாரிகள். 1950 முதல் இன்றுவரை அவர்களின் நிலையும் மாறவில்லை. செயல்பாடுகளும் மாறவில்லை,7.மக்களின் , நாட்டின் பாதுகாப்பின்மை8.தீவிரவாதம் அதிகரிப்பு9.சமுதாய சீர்கேடுகள் அதிகரிப்பு10.முன்னேற்றம் காணாத கிராமங்கள்11. லஞ்சம் அதிகரிப்பு12.கல்வி கட்டணம் கட்டுபடுத்தாத கல்வி இயக்கம்13.மின்சாரம் தேவையான அளவு உற்பத்தி செய்யாமை,.14.மோசாமாகி கொண்டு வரும் இந்திய அரசியல்15.நீதிக்கும், காவலுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பு.
இன்னும் எவ்வளவோ....ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையேயா பிரச்சனைகள் கணக்கில் அடங்கா,,,இது அந்த அந்த பகுதி மக்களுக்கும், மாநிலத்துக்கும் மட்டும் தான் வெளிச்சம்.....

உச்சகட்ட கடைசி காட்சி

இன்றைய பொது வேலை நிறுத்தம் , தி.மு.க-வின் கடைசி காட்சி. நேற்றைய மத்திய அரசின் அவசர கூட்டத்தில் கூட தமிழர்களை கொல்லபடுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று தான் இந்தியா சொல்லி இருக்கிறதே தவிர, இலங்கை அரசௌ உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி உடனடியாக போரை நிறுத்தவிட்டால், இலங்கைக்கு அளித்துவரும் எல்லா உதவிகளையும், மற்றும் தூதரக உறவையும் முறித்து கொள்வோம் என்று கூற வில்லை. இது வருந்தி கவலை பட்டு இருக்கும் இந்திய மற்றும் உலக தமிழ் மக்களுக்கு மேலும் பெருத்த ஏமற்றத்தையும், கோபத்தையும் இன்னமும் அதிகரிக்க செய்து இருக்கிறது.சில நியாமான கேள்விகளையும், உணர்வுகளையும் இங்கே வெளிபடுத்தியே ஆகவேண்டும்.1. எத்தனை தடவை மத்திய அரசு அவசர கூட்டதை கூட்டும். மக்களை ஏமாற்றுவற்கும், சிலரை திருப்தி படுத்டுவும் எதற்க்கு இந்த முயற்சி.2.இந்திய அரசாங்கம் போரை நிறுத்த வேண்டாம். குறைந்தது இலங்கைக்கு அளித்து வரும் எல்லா உதவிகலையும் யேன் நிறுத்த கூடாது.?3.தமிழ் இனம் இந்திய மக்களுக்கு சொந்தம் இல்லையா. சொந்தமோ பந்தமோ, அருகில் உள்ள ஒரு நாடு, தமிழ் மக்களை கொன்று கொவித்து வருகிறது. குறைந்தது மனிதாபமான அடிபடையில், மனித இனத்தின் அழிவுகளை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்தியாவின் பலம் இவ்வளவு தானா?4.இதை பார்க்கும் போது, இந்திய அரசின், சிலரின் உதவியும், ஆதரவும் இல்லாமல் இலன்கையில், இப்படி தொடர்ந்து போரை நடத்தி கொண்டு இருக்க முடியாது, என்றே தோன்றுகிறது.
5.இந்திய அரசு, ஒரு உயிரை விடுதலை புலிகள் தான் கொன்றார்கள் என்று முடிவு தெரிந்ததற்க்காக, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரின் பழி வாங்குவது எவ்வித்ததில் நியாயம்.?
6. விடுதலை புலிகலை அழிப்பதின் பேரில், ஒரு நாட்டின் வாழும் குடிமக்களை கண்மூடித்தனமாக அழிப்பது எவ்விதத்தில் நியாயம்?
7.இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் - மதில் மேல் பூனையாக இருப்பதையே காட்டுகிறது. இது இவர்களின் இயலாமையா இல்லை பாசாங்கா?
8.சில நாட்களுக்கு முன்பு, தமிழ் நாட்டின் சில அரசியல் கட்சிகளும், சில இயக்கங்களும், பொது வேலை நிறுத்தம் என்று சொன்ன போது, இதே தமிழக அரசும், காவல் துறையும் , பொதுவேலை நிறுத்ததில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் , இதை சில தொலைக் காட்சிகல் இரவு முழுவதும், ஒளிபரப்பிக் கொண்டு இருந்தன...அப்படி கர்சித்தவர்கள் இன்று எங்கே போனார்கள். இது நியாயமா? ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை என்பதையே காட்டுகிறதா?
9.இதில் வேடிக்கை என்ன வென்றால், ஒரு நாட்டின் ஒரு பகுதியில் ஒரு இனத்தை அழித்துக் கொண்டு இருக்கும் வேலையில், உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் , எந்த இயக்கதிற்க்கும், எந்த ஒரு தனி மனிதனுக்கும், அதிகாரமும் இல்லை, பலமும் இல்லை, அக்கரையும் இல்லை என்பதே காட்டுகிறது. இதுவெல்லாம் வரலாற்றில் மட்டும் பதிவாக அமையும். இது இன்றைய காலக்கட்டத்தில், உலக நாடுகள் பெரும் தவறுகளை தடுக்க தவறி விட்டன. இவைகள் எல்லாம் அறிந்த உலக மக்களின்,மனிதத்தின் மனசாட்சி மட்டுமே கருகிக் கொண்டு இருக்கின்றன.
10.இந்தியாவில், சில கட்சிகளும், சில தொலைக் காட்சிகளும், சில பத்திரிக்கைகளும், இந்த மனித அழிவை பற்றி ஒரு பொருட்டாகவே கருத வில்லை என்பதை பார்க்கும்போது ஈவு இரக்கம் இல்லாத ஜெம்மங்களாகவே தோன்றுகிறது.
11.உலக வரலாற்றில், இது மிகபெரிய அழிவு நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

அசிங்கம் / வெட்க கேடு

தற்போது தி.மு.க கூட்டனி கட்சிகளும், தி.மு.க.வும் ஒரு விசயத்தை பெரியாதக்க முயல்கிறது. அது அண்ணா. தி.மு.க.வில் குறிப்பிட்டு உள்ள சேது சமுத்திர திட்டத்தை பற்றி.
தி.மு.க-வுக்கும், அதன் கூட்டணிக்கு வேற பிரச்சனைகளே கண்ணுக்கு தெரியவில்லைய. -இதை எழுப்புவதன் மூலம், அவர்கள் மற்ற விசயங்களை மூடி மறைக்க பார்க்கிறார்கள். அவர்களுக்கு,
1. தினம் தினம் செத்து மடியும் நம் தமிழ் இனத்தின் சாவை , அழிவை வேடிக்க பார்ப்பது - இலங்கை பிரச்சைனைகள் தெரியவில்லையா கண்ணக்கு?
2. காவல் துறைக்கும், வக்கீகளுக்கும் இடையே நடந்த பிரச்சைனைகள் தெரியவில்லையா ?
3. விலைவாசி உயர்வால், அரிசியும், சமையல் பொருள்களின் விலையும் விண்ணை தாண்டும் அளவுக்கு ஏறினது பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
4.விவசாயகளின் வாழ்க்கை தரம் உயர்த்தபடாமல் , இன்னும் ஏழ்மை நிலைய அடைவது பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
5.சரியான அளவுக்கு மின்சாரம் உற்பத்தி இல்லாமல், தமிழ் நாடு இருட்டிலும், சிறு தொழிலார்கள் வேலை இழந்தும், பெறும் கடனாளி ஆனது, பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
6.அடிப்படை வசதிகாளான, நல்ல குடிநீரும், நல்ல சாக்கடை வசதிகளும் செய்யாமல், சென்னையும், தமிழ்நாடும்- இன்னமும் நாறிக் கொண்டு இருப்பது இவர்களுக்கு பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
7.தேவையான அடிப்படை கட்டமைப்புகளை (சாலை மற்றும், பாலங்களும்) இன்னமும் சரி செயாமல், போடாமல், இருப்பது இவர்களுக்கு பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
8.கொலை, கொள்ளை , வழிபறிகள் என்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது இவர்களுக்கு பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
9 ரொம்ப நாளாகவே தமிழ் மீனவர்களை சுட்டுத் தள்ளும் இலங்கை ராணுவத்தின் அட்டூழிலியம் இவர்களுக்கு பிரச்சனைகளாகா தெரியவில்லையா?
10 காவிரி மற்றும் பாலாறு போன்று தமில் நாட்டை சுற்றியும் தண்ணீர் பிரச்சனைகல் எல்லாம் இவர்களுக்கு பிரச்சனைகளாகா தெரியவில்லையா?....இன்னும் எவ்வளவோ....இவர்களுக்கு யார் தீர்ப்பளிப்பார்கள்?

கண்டனத்துக்குறியது

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.கருணாநிதி நேற்றைய பேட்டியின் போது, ஒரு கேள்வி பதிலுக்கு மருத்துவர் ராமதாசை பற்றி பேசியிருந்தார். தன் (மருத்துவர் ராமதாசு-வின்) மகன் ஐந்து வருடங்கள் காங்கரசு ஆட்சியில் இருக்கும் போது, இலங்கை தமிழர்களை பற்றி எந்த கேள்வியும் கேக்க வில்லை என்றும், அதே சமயம் , அவர் தன் மகனை பதவியும் விலக சொல்ல வில்லை. அப்படி மருத்துவர் ராம்தாசு செய்ய சொல்லி இருந்தால் அவரை, நான்(கருணாநிதி)'யோக்கியர்' என்று நினைத்து இருப்பேன் என்று கூறி இருந்தார்.இது ரொம்பவும் கண்டனத்துக்குறியதும், அவரின் இன்னமும் அரசியல் முதிர்ச்சி இன்மையும் காட்டுகிறது. சில உண்மைகளையும், சில நிகழ்வுகளையும் இங்கே நினைத்து பார்க்க வேண்டும்.1. இவர் (கருணாநிதி) ஐந்து வருடங்கள் என்ன செய்து கொண்டு இருந்தார். ? இவர் மத்திய அரசியலில் மிக முக்கியமானவர்களில் ஒருவர். இவர் தன் உடல் நலத்தையும், குடும்ப நலத்தைப் பற்றியுமே நினைத்து கொண்டு இருந்தாரா?2.கடந்த ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலமாக தான் இலங்கையில் போர் தீவிரமடைந்து வருகிறது. கருணாநிதி என்ன தூங்கி கொண்டு இருந்தார?3.காங்கிரசு அரசில் இருந்து கருணாநிதியின் அமைச்சர்கள் ஏன் பதவி விலக வில்லை. அவர்களை பதவி விலக சொல்லியிருந்தால், கருணாநிதியை 'யோக்கியர்' என்று மக்களும், மற்ற கட்சிகளும் நினைத்து இருக்கும். அப்படி சைய வில்லை.4. கருணாநிதி ஏன் மத்திய அரசில் இருந்து விலக வில்லை. மதிய அரசு தான் மவுனமாகவும், இலங்கை போரை நிறுத்த, அதர்க்கு சரியான முடிவுகள் எடுக்க வில்லை. கூடணி ஒரு சந்தர்ப்ப வாதம் என்றால், சந்தர்ப்பங்களையே கூட்டணியாக தொடர்ந்து கொண்டு இருப்பவர் கருணாநிதி இல்லையா? இது மட்டுமா, சன் டிவி குழுமத்தில் இருந்து பிரிவது போல் பிரிந்து, தன் குடும்ப லாபத்துக்கும் தன் கட்சிக்கமாக மூன்று தொலைக்காட்சிகளை அரம்பித்து, தயாநிதி மாறனை பதியில் இருந்து இருக்குவது போல் இறக்கி, கனிமொழியை அமைச்சராக்கி, தென் மாவட்ட்டஙலில் அழகிரியை தென்னக முதல்வரா பிரதிபளித்து இருக்கிறார் என்றால் அது மிகை யாகாது. தமிழ் நாட்டில் இனி வரும் காலங்களில் இவரோட குடும்பம் ராஜ பரம்பரை போன்று வாழ , இருக்க கருனாநிதி வழி வகை செய்து இருக்கிறார் என்றால் மறுக்க முடியமா.5.பாட்டளி மக்கள் கட்சி மட்டும் தான் தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவதாக, ஊடகங்களும் , மற்ற கட்சிகளும் பேசுகிறார்கள். எந்த கட்சி மாறவில்லை. எந்த கட்சி மாறாமல் இதுவரை இருக்கிறது.? பாட்டளி மக்கள் கட்சி மட்டும் என்றால் இளக்காரமா?6.தேர்தலில் எந்த கட்சி எந்த அணியில் வேண்டுமானாலும், சேரட்டும். தேர்தல் கூட்டணி வேறு. அதன் நோக்கம் வேறு. ஆனால், சமுதாய பிரச்சனைகளும், இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளும் இதுவரையிலும் தீர்க்க படவில்லை. அது அதிகார்த்தில் இருக்கும் கட்சியானாலும் சரி, அல்லது, அதிகாரத்தில் இல்லத கட்சியானலும் சரி.7.மொத்ததில்,யாரை யாரு வேண்டுமனாலும் குறை / குற்றம் சொல்லலாம். ஆனால் வீண் பழியும் , செய்யாததை செய்ததாக தம்பட்டம் அடித்து கொள்வதும் தவிர்க்க படவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு செய்தி ஊடகமாக ஆகி விட்ட காலத்தில், யாரையும், யாரும் ஏமாத்த முடியாது. மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். பொருமிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களிடம், பணமும், அதிகாரமும் இல்லை. ஆனால் வோட்டு இருக்கிறது. வைப்பார்கள் வேட்டு!. தேர்தலுக்கு பின் தெரியும்.ஆனால் பயம் என்னவோ பணமும், அதிகாரமும் நியாயமான தேர்தலை சீர்க் கொலைத்து விடுமோ என்ற பயம் எல்லோரிடமும் இருக்கிறது. மதிய அரசே சில முக்கியமான விசய்ஙகளில் மவுனமாக இருக்கும் போது, தேர்தல் ஆணையும் மட்டும் என்ன விதி விலக்கா?.அவர் அவர்களின் மனசாட்சி மட்டுமே நீதி வழங்கும்.

Sunday, March 15, 2009

மனசாட்சியும் மண்ணாங்கட்டியும்

கோபம் எல்லாம் உண்மை தெரிந்தும், அதர்மங்கள் நடக்கிறது என்று தெரிந்தும் அதற்க்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனமாக இருக்கும் மனிதர்கள் மீது தான்......
இதுவெல்லாம் துரோகம் இல்லையா?
விடுதலை புலிகள் மீது மட்டும் தாக்குதல் நடத்தாமல் தமிழ் மக்கள் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி கொன்று குவிப்பதை இந்தியா மட்டும் அல்லாமல் ஐ. நா-வும் , மற்ற நாடுகளும் தடுக்காமல் வெறும் அறிக்கை மட்டுமே விட்டு கொண்டு இருப்பது அவர்கலளின் கையாலாகத தன்மையும், உணர்வின்மையுமே காட்டுகிறது.
இந்திய தொலைக்காட்சிகளுக்கும், உலக தொலைக்காட்சிகளுக்கும், மற்ற ஊடகங்களுக்கும், இலங்கையில் நடக்கும் கொடுமை பற்றி தெரியவில்லை கண்டு கொள்ள வில்லை. அவர்களுக்கு எங்காவது ஒரு கொலை, எங்காவது ஒரு அரசியில்வாதியின் பேச்சு , இல்லை எதாவது ஒரு நடிகன் நடிகையின் பற்றிய செய்திகளே முதன்மை பெறுகின்றன இது இந்த காலத்தில் நிகலும் கொடுமைகள் அதையும் வாய் பொளந்து விரும்பி பார்க்கும் பொதுமக்களும் காரணம்...
வல்லரசுகள் என்று பீற்றிக் கொள்ளும் நாடுகளும் பொத்திக் கொண்டு இருக்கிறது.
இந்திய அரசாங்கமும் வெறும் வார்த்தை ஜாலங்களே விட்டு கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு செத்து மடியும் தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இலங்கை ராணுவத்தால் பாதிக்கபட்ட தமிழர்களுக்கு மருந்து பொருள்களையும் , மற்ற உதவிகளையும் செய்கிறது....இது குழந்தையும் கிள்ளி, தொட்டிலும் ஆட்டும் கதை.....
தமிழக அரசும், தமிழக காங்கரசும் ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைபட்ட விதமாக நடந்து கொள்கிறார்கள். கண்ணைக் கட்டிக் கொண்டால் உலகம் தெரியாது என்பது போல..இவர்களின் பேச்சும், நடவடிக்கைகளும் யாருக்கும் புரியாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறார்களோ....என்றே தோன்றுகிறது, இல்லை தெரிந்தும் இவர்களிடம் பணமும் அதிகாரமும் இருப்பதால் இப்போதைக்கு மற்றவர்களால் ஒன்றும் செயமுடியாது என்றே நினைக்கிறார்கள்...காலம் தான் இவர்களுக்கு பதில்...சொல்லும்.
ஆனாலும் தேர்தல் வருவதற்கு முன்னரே மற்றக் கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சினைகளை கையில் எடுத்து இருக்கிறது. அவர்களால் வெறும் கூச்சல்களும் போரட்டங்களும் மட்டுமே நடத்த முடிகிறது.. பிடிக்காதவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்வது கொடுமையிலும் கொடுமை. இலங்கை அரசுக்கு உதவி செய்யும் இந்திய அரசுக்கு பொறுபானவர்களை எந்த சட்டத்தில் கைது செய்வது....
இவர்களுக்கு மொத்ததில் மனச்சாட்சியும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

Saturday, March 24, 2007

தமிழா தமிழா

This site is dedicated to tamil and tamilar around the world.